Thursday 20 September 2012

விவேகானந்தர்


விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது?என்று கேட்டார் விவேகானந்தர்.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு விவேகானந்தர் உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நன் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன்என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.