Thursday 20 September 2012

மே 18


கூண்டோடு எம்மினம் அழிக்கப்பட்டது!
துரோகத்தால் வீரம் சாய்க்கப்பட்டது!

கருவில் இருந்த சிசு
வெளி உலகைக் காணாமல் சிதைந்து போனது
கன்னியர்கள் கற்பிழந்து கதறினார்கள்
காளையர்கள் நிர்வாணமாய் சுடப்பட்டனர்
ஆண்களும் பெண்களும் கொத்துக் குண்டுகளுக்கு பழியாயினர்!

மருந்துகள் தடைசெய்யப்பட்டன
நெகிழிப் பைகளில் இரத்தம் சேகரிக்கப்பட்டது
குடலும் இருதயமும் உடலுக்கு வெளியே துடித்தன
எங்கும் பிணங்கள் குவிந்துக் கிடந்தன
அதனையும் புணர்ந்தன சிங்கள் நாய்கள்!

அறிக்கைவிட்டு கூத்தாடினான் கலைஞன்
தூது விட்டு பழி தீர்த்தாள் சனியன்!
பலிக்காடாக எமது இனம்…
ஒன்றல்ல, இரண்டல்ல….
பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டது!

செய்தியாளர்கள் தடைசெய்யப்பட்டனர்
ஐநா’வினர் வெளியேற்றப்பட்டனர்
சாகப் போகிறோம் என்று தெரிந்தே
பல உயிர்கள் நொந்துச் செத்தன…

புலிகளைச் சிங்களம் தோற்கடித்ததா?
நம்பவில்லை… வதந்தி என்று வாதாடினேன்
பின்னர் அறிந்தேன் உலக நாடுகளின் நாடகத்தை!
இன்னுமா இவர்களை நம்புவது?
இன்னுமா இவர்களிடம் கையேந்துவது?
போராடி பெறுவதைப் பிச்சையாய் கேட்கலாமா?

எனக்கு நம்பிக்கை இல்லை
இந்த துரோகிகள் இணைந்து
தனி ஈழத்தை, தமிழீழத்தைப் பெற்றுத்தருவார்கள்?
எங்கே எமது புலிகள்?
இன்று எலிகளும் புலி வேசமிட்டு ஏய்க்கின்றன
யாரை நம்புவது?

எங்கே எமது தலைவன்?
அத்தனையும் பார்க்கிறாயா?
அனைத்தையும் குறித்துக்கொள் தலைவா
இவர்களுக்கு நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்
பெற்ற அத்தனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்!

இன்று நமக்கு துக்க தினம்!
இதுவே வெற்றி தினமாக,
தமிழீழ தேசிய தினமாக மாறும்!
சரியென்று ஒரு வார்த்தை சொல்
அனைத்தையும் உதறித் தள்ளி
நான் வருகிறேன் உன்னோடு!

என் உணர்ச்சிகள் இன்னும் மடியவில்லை
போராட்ட குணம் இன்னும் ஒடுங்கவில்லை
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை
அழுது புலம்ப நான் விரும்பவில்லை!

மே 18
பாடம் கற்பிப்போம் உலகிற்கு!
உண்மைப் போராளிகள் உயிரோடு இருந்தால்
இன மான உணர்வு மிச்சம் இருந்தால்
இறுதிவரை போராடுவோம்!
தமிழீழம் கிடைக்கும் வரை!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.