Friday 17 January 2014

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.