ரஷ்ய நாட்டு கடற்படையில் 1987 ஆண்டு
"பகு" என்ற விமானம் தாங்கி கப்பல் சேர்க்கப்பட்டது.
பின்னர் இது "அட்மிரல் கோர்ஸ்கோவ் "என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ரஷ்யா உடைந்தபின் இதை பராமரிக்க அதிக செலவானதால் இது ரஷ்ய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
(அதாவது காயலான் கடைக்கு போடப்பட்டது.)
இதை இந்தியாவுக்கு இலவசமாக தர ரஷ்யா முன்வந்தது.புதுபித்து தருவதற்கான செலவை இந்தியா ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.
(அதாவது ....... மேலே பறக்குற பணம் உனக்கு..
கீழ விழுற பணம் எனக்கு.)
9300 கோடியில் புதுபிக்க இந்தியா சம்மதித்தது.
அந்த கப்பலுக்கு "ஐ என் எஸ் விக்ரமாதித்யா"
என்று பெயரிடப்பட்டது.
(பெயர் வச்சதுக்கு 9300 கோடி)
2008 ஆண்டு இந்த கப்பலை இந்தியாவிடம்
ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
( அது எப்படி அவ்வளவு சீக்கிரம் ரிப்பேர் பார்ப்பீங்க)
புதுப்பிக்கும் செலவை படி படியாக ரஷ்யா அதிகரித்தது.
15 ஆண்டுகால இழுபறிக்கு பிறகு14260 கோடி செலவில் புதிப்பிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
( யாரும் போராட்டம் நடத்தல....செலவு கணக்கு கூடிட்டாம்.)
இப்ப மேட்டர் என்ன்னன்னா.!!!
இப்படியாகப்பட்ட வீர தீர் சூர கப்பலை ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர.
ஐஎன்எஸ் டிரிகன்ட்
ஐஎன்எஸ் டெல்லி.
ஐஎன்எஸ் ஆயில் டேங்கர் தீபக்.
என்ற மூன்று கப்பல்கள்...விக்ரமாதித்யா கப்பலை இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து அழைத்து வந்ததாம்.
இப்ப புரியுதா கரண்ட ஏன் காணோம்ன்னு ???
(படித்து விட்டு மயக்கம் போட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.