Friday, 17 January 2014

மாவோயிசம்

மாவோயிசம் என்றாலே வன்முறைதான் என்ற பொருள் தற்போது உலாவரு கிறது. அதில் உண்மை உள்ளதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தவும், மாவோ என்பவர் யார்? அவர் கூறிய தத்துவ வழிகாட்டல்கள் எவை என்பதை தெளிவுபடுத்தவும் இந்த பதிவு... 1942-44ல் அன்றைய சோவியத் யூனியனுக்கு எதிராக சீனாவில் ராணுவ தளம் ஒன்றை அமைப் பதற்கு ஜப்பானோடு இணைந்து கொண்டு அமெரிக்கா பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயிகளின் உழைப்பை சுரண்டின. இவைகளை கண்டு வெகுண்டெழுந்த மாவோ தனது படைகளுடன் மக்களையும் இணைத்துக்கொண்டு ஆயுதம் ஏந்தி நெடும் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது மார்க்சிய-லெனினிய சித்தாந்தமே ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டியடித்து சீனாவை ஒரு குடியரசு நாடாக பிரகடனம் செய்தது. மாவோவின் அந்த பாதைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவமே உதவியது. அதன் மூலமே “மக்கள் சீனம்”அமைக்க உதவியது அரச பரம்பரை மற்றும் ஏகாதிபத்திய வல்லுனர்கள் வேட்டைக்கு இரையாகவும், நிலப்பிர புத்துவத்திற்கு அடிமையாகவும் இருந்த மக்களை சுதந்திரக்காற்றை சுவாசிக்கச் செய்தவர். உலகில் அக்டோபர் புரட்சிக்கு அடுத்து பாசி சத்தின் மீதான மிகப் பெரிய வெற்றி சீனப் புரட்சி யாகும். இந்த வெற்றிக்காக அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், வறுமையிலும் மூழ்கிக் கிடந்த சீன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப டுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் மீட்டெடுத்து “நவசீனம்” உருவாக்கியவர் தான் மாவோ. அன்றைய தினம் இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, மக்கள் சீனத்திற்கு சென்று மாவோ-வை சந் தித்த பிறகு தனக்கு ஏற்பட்ட பரவ சத்தை தெரிவிக்கையில், மா சே துங் ஒரு சரித்திர புருஷர்; மகத்தான போர் வீரர்; மாபெரும் புரட்சியாளர் என்று வர்ணித்தார். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து பணக்கார விவசாயக் குடும்பம் என்ற நிலையை எட்டியபோதும் அந்நியர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற சுதந்திர தாகம் அவருக்குள் வேரூன்றியது. இதனால், மாணவப் பருவத்திலேயே அரசியலில் பிரவேசித்து மார்க்சிய-லெனினிய தத்துவத்தை கற்றுக்கொண்டு, அந்தத் தத்துவத்தை தனது நாட்டின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்தி உழைக்கும் மக்களுக்கான பூரண விடுதலையை செஞ்சீனப் புரட்சியின் மூலம் பெற்றுக் கொடுத்து ஆளும் தத்துவமாக உயர்த்தி மார்க்சிய மேதையானார் மாவோ. ஏகாதிபத்தியம்- உள்நாட்டு சதிகார கும்பல் களின் அடக்குமுறைகளை எதிர்த்து 50 ஆண்டுகள் நடந்த போரில் தனது மனைவி, மகன்கள், சகோதரிகளை இழந்ததையும் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 83 வயதில் மரணம் அடையும் வரையிலும் நாட்டு மக்களும், நாடும் வளம்பெற்றிட போராட்டமே வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட மாவோவின் யுக்திகளை யும் அவர் செய்த தியாகங்களையும் நினைவுபடுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.