Thursday 16 January 2014

பிரியாணியின் கதை

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...??? பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும் உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!! அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடி முடிவு செய்தான் அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ... அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கி தயாரானான் அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால் ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி விட்டான் ... வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது .... வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது. நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்ட நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது. அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவை யில் மெய் மறந்து போனார். அதன் பிறகு அந்த சுவை மிகுந்த அந்த அரிசி உணவுக்கு ஓடிப்போன அந்த சமையல்காரர் பெயரையே சூட்டினாராம் அந்த சமையல்காரர் பெயர் தான் ..."பிரியாணி" உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்க அக்பருக்கும் தான் தெரியும்... எது எப்படியோ நமக்கு சாப்பிட நல்ல பிரியாணி கிடைச்சுது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.