Friday 17 January 2014

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்

உலக நாடுகள் வெகு நாட்களுக்கு முன்பே தடை செய்த பின்பும் இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த மாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன. ஆனால் இன்னமும் பல மருந்துக்கடைகளில் விற்கவும் செய்கின்றன.
இதோ அந்த தடைசெய் யப்பட்ட மருந்துகளின் விபரம்.
1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு - வலி நிவாரணி பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine ) பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு - கிருமிகளை அழித்தல் பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு - வலி நிவாரணி பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல் பக்க விளைவு - நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு - மலமிலக்கி பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் என்ன தெரியுமா?
1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol
இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள்.
இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களுமே தான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.