Friday, 31 August 2012

இம்மானுவேல் சேகரன்



இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 111957தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.


வாழ்க்கைச் சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகுபரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

இராணுவத்தில் பணி

சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், உருது, இந்தி, ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.

குடும்ப வாழ்க்கை

1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.

ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம்

  • 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில்முதுகுளத்தூரிலும்அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

காங்கிரசில் இணைவு

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார்.

கொலை செய்யப்படுதல்

1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மு கைது செய்யப்பட்டார். 1959 ஜனவரியில் அவர் குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.