ஒண்டி வீரன் (ஆங்கிலம்: Ondi Veeran) புலித்தேவனின் படையில் தளபதியாக பணியாற்றியவர். முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வென்னி காலடி, ஒண்டி வீரன் மற்றும் பொட்டி பகடை போன்றோர்களின் வரலாறுகள் தற்பொழுது தொகுக்க பட்டு வருகின்றன. மேலும் ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் வாஞ்சிநாதன் தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் பஞ்சமன்" என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலடி, ஒண்டி வீரன், கந்தன் பகடை, பொட்டி பகடை,சுந்தரலிங்கம், கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைகின்றனர் என அ. மார்க்சு, அழகிய பெரியவன், ஏ.பி. வள்ளிநாயகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.