Friday, 31 August 2012

கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)

வீரபாண்டிய கட்டபொம்மன்தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும்ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.


கட்டபொம்மன் பெயர் காரணம்

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர்  என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்றஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 101798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.






ஊமைத்துரை

ஊமைத்துரை (இ. நவம்பர் 161801வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.


வாழ்க்கைக் குறிப்பு

இவரது இயற்பெயர் துரைசிங்கம். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின்தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.
இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாளையங்கோட்டை கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலைகேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

பண்புகள்

ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர்கள், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணித்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது

ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு

காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.


ஒண்டி வீரன்

ஒண்டி வீரன் (ஆங்கிலம்: Ondi Veeran) புலித்தேவனின் படையில் தளபதியாக பணியாற்றியவர். முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வென்னி காலடி, ஒண்டி வீரன் மற்றும் பொட்டி பகடை போன்றோர்களின் வரலாறுகள் தற்பொழுது தொகுக்க பட்டு வருகின்றன. மேலும் ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் வாஞ்சிநாதன் தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் பஞ்சமன்" என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலடி, ஒண்டி வீரன், கந்தன் பகடைபொட்டி பகடை,சுந்தரலிங்கம்கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைகின்றனர் என அ. மார்க்சுஅழகிய பெரியவன்ஏ.பி. வள்ளிநாயகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.


தலையெழு வள்ளல்கள்


குமணன் , சகரன் , சகாரன் , செம்பியன் , துந்துமாரி , நளன் , நிருதி ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர்.
இந்தத் தொகுப்பு வரலாற்றுக்கு முரணானது.
குமணன் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பிற்பட்டவன்.
செம்பியன் எனக் குறிப்பிடப்படுபவன் சிபிச் சக்கரவர்த்தி எனப் பேசப்படுபவன்.
தந்துமாறன் என்னும் வள்ளலைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
நிடத-நாட்டு நளன் பற்றிய இலக்கியம் உள்ளது.
பிற மூவர் புராணக் கதை மாந்தர்.

கடையெழு வள்ளல்கள்

சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.



சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு



  1. பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
  2. பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
  3. காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
  4. ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் சொல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
  5. அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
  6. நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்ய
  7. ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.


பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்பு

  1. பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
  2. ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
  3. காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
  4. மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
  5. எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
  6. பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
  7. ஆய் - "மோசி பாடிய ஆய்"


பிற கீதைகள்


கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:

பகவத் கீதை

பகவத் கீதை (Bhagavad Gita) என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதம் என்னும் புனைகதையில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதை.


கீதையின் போதனை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
  • பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
  • பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
  • ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
  • அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
  • யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.

கீதா சாரம்

சுத்தியாற் னெஞ்சிற்‍றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறத்துறந்தோர் - பத்தியா
னண்‍ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்‍ணும் பொருளா மிசைந்து.
பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்‍ணும் பொருளாவான்.
- பகவத் கீதை வெண்பாவிலிருந்து.


தோள் சீலைப் போராட்டம்

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரிதிருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்)பரவர், ஈழவர், முக்குவர்புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.


போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களிம் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுபாடு

திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முதல் போராட்டம்

சார்ல்சு மீட்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம்கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.

இரண்டாம் கட்ட போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர்திற்பரப்புகண்ணனூர்அருமனை,உடையார்விளைபுலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர்.

மூன்றாம் கட்ட போராட்டம்

1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'

இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலைநெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

தாலி அறுத்தான் சந்தை சம்பவம்

போராட்டத்தின் போது குப்பாயம் அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.

உடை உடுத்த உரிமை

உடை உடுத்த உரிமை வழங்கிய அரசாணை
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.








இம்மானுவேல் சேகரன்



இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 111957தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.


வாழ்க்கைச் சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகுபரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

இராணுவத்தில் பணி

சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், உருது, இந்தி, ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.

குடும்ப வாழ்க்கை

1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.

ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம்

  • 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில்முதுகுளத்தூரிலும்அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

காங்கிரசில் இணைவு

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார்.

கொலை செய்யப்படுதல்

1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மு கைது செய்யப்பட்டார். 1959 ஜனவரியில் அவர் குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.