Sunday 11 November 2012

எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா?

எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?
சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில் கவனியுங்கள்



அமெரிக்கன் அகடமி ஆப் ஸ்லீப் ரிசர்ச் அமைப்பு சில "டிப்ஸ்"களை தந்துள்ளது, இதோ:


* சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு 
படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.



* அதற்காக "டிவி" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். 
புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.



* படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், பத்து நிமிடம் வரை
புத்தகம் படிக்கலாம். இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.



* கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.


* தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.

* இரவில் காபி , டீ , சாக்லெட் , கோலா சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.


* படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.


* குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர "குட்டித்" தூக்கம் மிக நல்லது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.