Friday, 31 August 2012

நெப்போலியன்


நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல்தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும்,உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.
1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத்தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூஎன்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தசென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.

மரணத்தின் காரணம்

நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.

Friday, 17 August 2012

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.
எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oṇṭa okkod asiṭ *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு raṇdu randu ரண்டு indiŋ irāṭ irāṭ *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji mūnnu மூந்நு mūnd mūndiŋ musiṭ *muC
4 நான்கு நாலுகு ந
ாலக்கு nālu nālu நாலு nākh nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ēḍ(3) haft (II) *eẓu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēṇma eṭṭu எட்டு aṭṭhē (II) enumadī (3) hašt (II) *eṭṭu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒன்பது naiṃyē (II) tomdī (3) nōh (II) *toḷ
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)

தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர்.
Veeramamunivar


வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், போப்பையர் போன்றோர், உலக மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்பு, தமிழுக்கு உண்டென்பதை உலகிற்கு உணர்த்தினர். மேலும் ஐரோப்பிய மொழிகளில் பலவாறு தமிழ்ச்சொற்கள் விரவிக் கிடப்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தினர். ஆனால் முறையான ஆய்வுகள் அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. உலக மொழிகளில் தமிழின் தாக்கங்கள் உண்டென்ற உண்மை ஐரோப்பியர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
Robert Caldwell

தமிழின் வரலாற்றை, தொல்காப்பியம் மற்றும் கடைக்கழக இலக்கியங்களைக் கொண்டே கணித்தனர். தொல்காப்பியத்துக்கு முந்திய தமிழ்மொழியின் வரலாறு அறியப்படவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அறிஞர்கள் ஈடுபடவில்லை. முதன் முதலில் வணக்கத்திற்குரிய ஈராஸ் பாதிரியார், தமிழைச் சிந்துவெளியில் கண்டார். தமிழின் எல்லை முதன்முதலில் அப்போதுதான் விரிவடைந்தது.
G.U.Pope
கடந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மெசப்பொத்தோமியாவின் வரலாற்று நகரங்கள் பல அகழ்வாய்வு செய்யப்பட்டன. அதிலிருந்து கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு செய்திகள் வெளிப்பட்டன. அவைகளில் சிறப்பானவை அக்காலத்திய இலக்கியங்களே எனலாம். சிந்துவெளியில் தனிச் சொற்களாக அறியப்பட்ட நிலையில், மெசப்பொத்தோமியாவில் இலக்கியங்களாகவே கிடைத்தன. அவை முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தவை பலநூறு பக்க அளவில் அறியப்பட்டுள்ளன.

அவை யாவும் ஆப்பு எடுத்து எழுத்து வடிவில் ( ) உள்ளன. அவைகளை ஆய்வு செய்த மேற்கத்திய அறிஞர்கள், அவைகளை நூல் வடிவில் இன்று வெளிக்கொணர்ந்துள்ளனர். அவ்விலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்து, தமது ஆய்வுகளையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர். ஆனால் அச்செய்திகளின் ஆளத்தையும், மூலத்தையும் இன்றும்கூட அறிஞர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. குறிப்பாக அவ்விலக்கியங்களைத் தந்த மக்கள் யாவர்? அவர்களது முன்னோர்கள் யாவர்? அவர்கள் பேசிய மொழி யாது? அம்மொழியின் மூலம் எங்குள்ளது? என்ற வினாக்களுக்கு இதுவரை அவர்களால் விடை காண இயலவில்லை. அவ்விலக்கியங்களில் காணப்படும் பல நூறு சொற்களுக்கான பொருளையும் அவர்களால் தர இயலவில்லை.

சுமேரிய, அக்காடிய, எபிறேய, போனீசிய, எகிப்திய மொழிகளிலும் மேலும் பல மொழிகளிலும் அவ்விலக்கியங்கள் இன்று அறியப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்கள் பற்றிய எந்த ஆய்வையும் இதுவரையில் எந்தத் தமிழ் அறிஞரும் மேற்கொள்ளவில்லை. இவ்விலக்கியங்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் தமிழறிஞர்களிடம் காணப்படவில்லை.

1. தொல் தமிழரின் வரலாறு

2. தொல் தமிழரின் பண்பாடு, நாகரிகம்

3. தொல் தமிழரின் அறிவியல், வானியல்

4. தொல் தமிழரின் சமயம்

5. குமரிக் கண்டம், அதன் அழிவு

6. தமிழரின் மேலைநாட்டுப் பரவல் 

ஆகியவை குறித்த வரலாற்றுப் பதிவுகளை, தமிழ் இலக்கியங்களில் முழுமையாகக் காண இயலவில்லை. மேற்கண்ட செய்திகள் யாவும், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவை தமிழையும் தமிழ் இனத்தையும், தமிழ்நாட்டு வரலாற்றையுமே குறிப்பிடுகின்றன என்பதை மேலை நாட்டு அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இனி, தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய குறிப்புகளை, மேலை நாட்டு இலக்கியங்களில் தேடினால், அங்கு அவை கிடைக்கும். இதுவரையில் வெளிவராத புதிய செய்திகளைத் தமிழ் வரலாறு பெறும். அம்முயற்சியின் முதல் படியாக எபிறேய மொழியும், அம்மொழி பேசிய மக்களும் ஆய்வுக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடுகள், வியக்கத்தக்க வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் உள்ளன.

எபிறேய மொழிக்களத்திலேயே ஏராளமான தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் உருவானவைகளே ஆசிரியரின் பல்வேறு ஆய்வு நூல்களாகும். தொடர்ந்து மற்ற இலக்கியங்களையும் ஆய்வு செய்யும் பணியில், நூலாசிரியர் முனைப்புடன் உள்ளார். அதற்கான காலம் விரைவில் கனியும் என நம்பலாம்
Windows - ஜன்னல் - சாளரம்
Plastic - நெகிழி (நெகிழும் தன்மை உடையது)
Toothpaste - பற்பசை
Toothbrush - பல்துலக்கி
Soap - வழலை , அழுக்குப்போக்கி
Washing Soap - உடையழுக்குப்போக்கி
Bathing Soap - உடலழுக்குப்போக்கி
Detergent Power - சலவைத்தூள்
Detergent Bar - சலவைக்கட்டி
Ready-made - தயார் - ஆயத்தம், அணியம்
Ready made store - ஆயத்த அங்காடி
Shoe - அடர்ந்த காலணி / கால்கவர் காலணி
Slipper - காலணி
Socks - காலுறை
Skating - சறுக்கல்
Ice Skating - பனிச் சறுக்கல்
Ice Cream - பனிக்குழை
Ice - பனி
Snow - பனித்தூவி / பனிப்பொழி
Fog - மூடுபனி
Smog - பனிப்புகை
Switch - இயக்கி /மாற்று/நிலைமாற்றி
Electric Switch - மின்னியக்கி
Bakery - வெதுப்பகம்
Bake - வெதுப்பு / மிகை வெப்பத்தில் சுடு
Binocular - இருகண் நோக்கி
Telescope - தொலைநோக்கி
Long Range/Term View - தொலைநோக்கு
ஏறுமுக இலக்கங்களும் இறங்குமுக இலக்கங்களும்

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
PhotoPhotoPhoto: செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது.
உண்மையில் செந்தாழையை அன்னாசி என்ற பெயரிலே நமக்கு நன்கு தெரியும் .
அன்னாசி என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும்.
இதன் தமிழ்ப்பெயர் செந்தாழை ஆகும்.
இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.
அன்னாசி என்று பிற மொழியிலிருந்து ஒலிப்பெயர்ப்பதை விட ,
செந்தாழை என்று இனிய தமிழிலிலே அழைக்கலாமே !
Photo

Photo: தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி! தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு

இனிய தமிழ்சொற்கள் 

1, மிட்டாய் - இனிகம்
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
5, ஸ்ட்ரோ - உறிஞ்சுகுழல்
6, பாலிகிளினிக் -பல்துறை மருந்தகம்
7, ஹீட்டர் - சூடூட்டி
8, வாட்டர் ஹீட்டர் - நீர் சூடூட்டி
9, ஏர்கண்டிஷனர் - குளிர்பதனி
10, பியூட்டி பார்லர் - அழகு நிலையம்
11, லைட்டர் - தீ பொருத்தி
12, கேஸ் சிலிண்டர் - ஆவி உருளை
13, ஜலதோசம் - நீர்க்கோவை (அ) தடுமன்
14, ஜன்னல் - பலகணி (அ) காலதர்
15, காங்கரிட் - திண்காரை
16, மார்ஜின் - வரந்தை
17, மார்க் - மதிப்பெண்
18, ஜிரோ - சுழி
19,மெட்ரிகுலேசன் - பதின்மப்பள்ளி (அ) தகுதிநிலைப்பள்ளி
20, நர்சரி - மழலைப்பள்ளி
21, யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
22, பேனா - தூவல்
23, பென்சில் - கரிக்கோல்
24, ஸ்கெச் பென் - வரைகோல்