
நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இது குறித்து ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும். அவை பற்றியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் விளக்கியிருக்கிறேன்.
இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இந்த வாயுக்கள் நமது நாடிகளின்
ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.