Tuesday, 9 October 2012

பகத்சிங் மற்றும் தோழர்களின் பிணங்கள் எரிக்கப்படும் காட்சி!

பகத்சிங் மற்றும் தோழர்களின் பிணங்கள் எரிக்கப்படும் காட்சி!

பகத்சிங்குக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் (03.03.1931இல்)பஞ்சாப் கவர்னருக்கு பகத்சிங் கடிதம் எழுதுகிறார்:

"உங்கள் துப்பாக்கிப் படையைக் கொண்டு எங்களை கொல்லுங்கள். கிரிமினல் குற்றவாளிகளைப் போல தூக்கில் போடாதீர்கள். உங்கள் இராணுவத்துறைக்கு Firing squad-ஐ அனுப்பி எங்களைச் சுட்டு வீழ்த்த நீங்கள் உத்தரவிடுவீர்கள் எ
ன்று நம்புகிறோம்; விரும்புகிறோம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களோ, 'தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது. பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களையும் விடுதலை செய்யுங்கள்' என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்படி இந்தியா முழுவதும் தங்களுக்கு எதிராகவே எதிர்ப்பு வலுப்பெறுவதை கண்டு தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் மக்கள் முற்றுகையிடக்கூடும் என்று பயந்து தண்டனை நாள் வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது அரசு.

மூன்று இளைஞர்களுக்கும் தூக்கு கயிறு போடும் போது கடைசியாக சொன்ன வார்த்தை:

இன்குலாப் ஜிந்தாபாத்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.