அவங்க கழுத்துல
இருந்ததவிட
அடகுக்கடையிலதான்
ரொம்பநாள் இருந்துருக்கு
அம்மாவோட தாலி.
துருப்புடிச்சு தொவண்டாலும்
அடிக்கடி செயின் கழன்டாலும்
இப்பவரைக்கும் ஓடிக்கிட்டிருக்கு
அப்பாவோட சைக்கிள்.
சீமத்தண்ணி பத்தாம
திரிகருகி சிறுத்து எரியுது
சிம்னி வெளக்கு.
கொரகொரன்னு எரஞ்சுகிட்டே
கொஞ்சங்கொஞ்சம் பாடுது
ஒடஞ்சு ஒட்டுப்போட்ட ரேடியோ.
கஞ்சிவடிக்க அள்ளுன
காப்படி அரிசிய
சொளகுல போடச்சா
காவாசி எலிப்புழுக்க.
நடுராத்திரி எந்திருச்சு
தண்ணிவிட்டு அணச்சு
அடுத்தநாளைக்கு எடுத்துவச்ச
கொசுப்பத்தி.
நெனச்சு அழுவுறதுக்கு
நெறையா சோகம் இருந்தாலும்
உழச்சு திங்கிரோங்கிற
ஒரே நெனப்பு தான்
ஏழ எங்க
உசுர காப்பாத்துது
வாழ வழியத்த
இந்த தேசத்துல .....!!!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.