Sunday, 29 September 2013

விடியலை நோக்கி ஓர் பயணம்

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை!
தீர்ப்பு... விவாகரத்து!
அப்பாவிடம் 5 வருடம்!
அம்மாவிடம் 5 வருடம்!
தவிக்கும் குழந்தையின் பெயர்
"தமிழ் நாடு"
- விடியலை நோக்கி ஓர் பயணம்

வெளிநாட்டு படங்களை பார்த்து # காப்பிஅடித்து எடுக்கப்பட்ட # டமில்சினிமாக்களின் பட்டியல்:

21 grams © # சர்வம் Bangkok Dangerous © # பட்டியல் Network © # வேகம் Brewster’s Millions © # அருணாசலம் Hardcore © # மகாநதி Planes Trains and Automobiles © # அன்பேசிவம் What bob can do © # தெனாலி Very Bad things © # பஞ்சதந்திரம் Barefoot in the park © # அலைபாயுதே Hot bubblegum and American Pie © # பாய்ஸ் Butch Cassidy & The Sundance Kid © # திருடாதிருடா Sense and Sensibility © # கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன் Shop around the corner © # காதல்கோட்டை Big © # நியூ Sliding Doors © # 12B Fear © # காதல்கொண்டேன் Too Much © # காதலாகாதலா She Devil © # சதிலீலாவதி Corsican Brothers © # அபூர்வசகோதரர்கள் Life of David Gale © # விருமாண்டி.

வகைவகையான வீணைகள்!

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 2. விஷ்ணு- பிண்டகம், 3. ருத்திரர்- சராசுரம், 4. கவுரி- ருத்ரிகை, 5. காளி- காந்தாரி, 6. லட்சுமி- சாரங்கி, 7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி, 8. இந்திரன்- சித்தரம், 9. குபேரன்- அதிசித்திரம், 10. வருணன்- கின்னரி, 11. வாயு- திக்குச்சிகை யாழ். 12. அக்கினி- கோழாவளி, 13. நமன்- அஸ்த கூர்மம், 14. நிருதி- வராளி யாழ், 15. ஆதிசேடன்- விபஞ்சகம், 16. சந்திரன்- சரவீணை, 17. சூரியன்- நாவீதம், 18. வியாழன்- வல்லகி யாழ், 19. சுக்கிரன்- வாதினி, 20- நாரதர்- மகதி யாழ், 21. தும்புரு- களாவதி (மகதி), 22. விசுவாவசு- பிரகரதி, 23. புதன்- வித்யாவதி, 24. ரம்பை- ஏக வீணை, 25. திலோத்தமை- நாராயணி. 26. மேனகை- வாணி, 27. ஊர்வசி-லகுவாக்ஷி, 28. ஜயந்தன்- சதுசும், 29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி, 30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா) 31. அனுமன்- அனுமதம். 32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.

அவளொரு பேரழகி

அவள் கூந்தல்... கருப்பு புதைகுழி
அதன் நீளம்... வட்டியோடு வளர்ந்த அசல்
அவள் உச்சந்தலை வகிடு... அடர்ந்த காட்டிற்குள் அழைத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை
அவள் பொட்டு... பாதைக்கு போடப்பட்ட பூட்டு
அவள் நெற்றி... விலைக்குக் கிடைக்காத வானவில்
அவள் விழிகள்... குளத்தில் குளிக்கும் குட்டி மீன்கள்
அவள் மூக்கு... மூங்கில் தண்டில், நிலவில் அமைத்த முக்கோண கூடாரம்
அவள் இதழ்கள்... அதிகாலையில் இறக்கிய பனங்-கள்
அவள் கன்னம்... கலக்கி வைத்து காத்துக்கிடக்கும் தேன்-கிண்ணம்
அவள் கழுத்து... ஒளிவீசும் நிலவைத் தாங்கும் ஒற்றைக்கால் சுமைதாங்கி
அவள் மார்பகங்கள்... படர்ந்து கிடக்கும் பந்தலில் மலரத் துடிக்கும் மல்லிகை மொட்டுக்கள்
அவள் இடை... மானுடர்கள் வழுக்கி விழும் மதுபானக்கடை
அவள் விரல்கள்... கணு வைத்து நறுக்கப்பட்ட கரும்புத் துண்டுகள்
அவள் அங்கம்... கோலாரில் ஒளித்து வைத்த மாசில்லா தங்கம்
அவள் உடல்... வளைந்து செல்லும் வைகையாற்றில் உயிரைக் கொள்ளும் நீர் சுழற்சி
அவள் பாதம்... செடியில் உதிர்ந்த பூக்களில் மீதம்
அவளொரு அழகி, எட்டாவது அதிசயமாய் எட்டிப் பார்க்கும் பேரழகி..!

தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!!

தான் அழகி என்ற "திமிரு" அவளுக்கு...!! =================================== "அய்யோ" என அவளின் அழகை பார்த்தவுடன் சொல்ல தோன்றும்..!!
எத்தனை திமிரு அவளுக்கு இருக்க வேண்டும்..!! எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது ஆனால் அவளின் அழகுக்கு எல்லையே இல்லை என்பது அவளின் அறிவில்லா மூடநம்பிக்கை..!!
சர்வாதிகாரம் செய்கிறாள் அவள், அழகென்னும் ஒற்றை ஆயுதம் கொண்டு அத்தனையும் வென்று விடலாம் என றெக்கை கட்டி பறக்கிறாள்..!! நான் தலையில் அடித்து கொண்டேன்..!!
கண்மூடித்தனமாய் நம்புகிறாள் அவள், கட்டை விரலை வைத்து உலகிற்கே தன் அழகை விளம்பரம் செய்ய முடியும் என கனவில் மிதக்கிறாள்..!!! நான் எனக்குள் சிரித்து கொண்டேன்..!!
எங்கிருந்து வந்ததோ அவளுக்கு இவ்வளவு தைரியம், வீணாக போட்டிக்கு அழைக்கிறாள், அழகில் சிறந்தது நீயா இல்லை நானா என்று கண்ணாடியிடம் சண்டையிடுகிறாள்..!! நான் அங்கிருந்து ஓடி விட்டேன்..!!
மிகச் சரியான கிறுக்கி அவள்..!! அழகை கொண்டு எல்லாவற்றையும் அடிமையாக்க பார்க்கிறாள், அழகினால் வந்த ஆணவமும்,திமிரும் நிலைக்க போவதில்லை என்பதே அவளுக்கு புரியாத போது அவளை கிறுக்கி மட்டுமல்ல, அழகு பேய் என சொன்னாலும் தவறில்லை..!!

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்
2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.
3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .
4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.
5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.
6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.
7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.
8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.
9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.
10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

GOOGLE

GOOGLE :- Global Organisation Of Oriented Group Language of Earth APPLE:- Asian Passenger Payload Experiment HP :- Hewlett-Packard IBM:- International Business Machines Corporation HCL:-Hindustan Computer Limited WIPRO:- Western India Product Limited GE:-General Electronics INFOSYS:-Information System TCS:- Tata Consultancy Services AOL:- American Online BPL:- British Process Laboratory INTEL:- Integrated Electronics CISCO:- Computer Information System Company DELL:- michael DELL SONY:-Sound Of New York AMD:- Advance micro devices LENOVO:- LE(Legend),NOVO(New) COMPAQ:- Compatibility And Quality...

இந்த தேசத்துல .....!!!!!

அவங்க கழுத்துல இருந்ததவிட அடகுக்கடையிலதான் ரொம்பநாள் இருந்துருக்கு அம்மாவோட தாலி.
துருப்புடிச்சு தொவண்டாலும் அடிக்கடி செயின் கழன்டாலும் இப்பவரைக்கும் ஓடிக்கிட்டிருக்கு அப்பாவோட சைக்கிள்.
சீமத்தண்ணி பத்தாம திரிகருகி சிறுத்து எரியுது சிம்னி வெளக்கு.
கொரகொரன்னு எரஞ்சுகிட்டே கொஞ்சங்கொஞ்சம் பாடுது ஒடஞ்சு ஒட்டுப்போட்ட ரேடியோ.
கஞ்சிவடிக்க அள்ளுன காப்படி அரிசிய சொளகுல போடச்சா காவாசி எலிப்புழுக்க.
நடுராத்திரி எந்திருச்சு தண்ணிவிட்டு அணச்சு அடுத்தநாளைக்கு எடுத்துவச்ச கொசுப்பத்தி.
நெனச்சு அழுவுறதுக்கு நெறையா சோகம் இருந்தாலும் உழச்சு திங்கிரோங்கிற ஒரே நெனப்பு தான்
ஏழ எங்க உசுர காப்பாத்துது வாழ வழியத்த இந்த தேசத்துல .....!!!!!

"மனைவி என்பவள் கணவனுக்கு

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !
கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . !
நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !
ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . !
தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !
கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்!

பதில் சொல்லாத டயலாக்ஸ்

பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா? [ இல்லை புளியம்பழம் ] 7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே? [ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ] 8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா? [ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ] 9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா? [ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ] 10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா? [ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

பழமையில் தான் பசுமை இருக்கிறது

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா? காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா? முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா? கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா? மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா? இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா? நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா? ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா? கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா? மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா? வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா? பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா? ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா? அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? பாலைப்பூ காத்தாடி தெரியுமா? சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா? கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா? அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின் முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா? அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ? அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ? ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா? பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா? தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ? இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா? இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ ஆசீர்வதிக்கப்பட ்டவன்..... இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக... பழமையில் தான் பசுமை இருக்கிறது பாசம் கன‌க்கும் உறவும் இருக்கிறது....

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? பாகம் - 2

1.தரைக் கூட்ட இருக்கும் பாவாடையை தூக்கி பிடித்த படி பாத கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது. 2.பேருந்தில் தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தண்டனை தரும் போது. 3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன் என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள் என்று அனைவரையும் சொல்ல வைக்கும் போது. 4.பொன்னகையே இல்லாமல் புன்னகையால் மட்டுமே தன்னை அலங்காரம் செய்து கொள்ளும் போது. 5.கோபத்தை உள்ளடக்காமல், பட பட வென எண்ணையில் போட்ட கடுகாய் பொறிந்துவிட்டு பின் தனியாய் அமர்ந்து அழும் போது. 6.ஆண்களை அடக்காமல் தானும் அடங்காமல் சமமாய் நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும் போது. 7.வாயாடி என யார் பட்டம் தந்தாலும் வாய் பேசுவதை நிறுத்தாமல் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும் போது. 8.அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெட்கப் போது. 9.தன்னை விட பெரிய பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை போது. 10.இவ்வளவு தான் உன் சுதந்திரம் என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே, தன் சுதந்திரத்தின் எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் போது. 11.புல்லில் தங்கிய பனித்துளி போல ஈரக் கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும் தண்ணீரை தட்டி விட்ட படி கூந்தலை உலர்த்தும் போது. 12.தெரிந்த கேள்விக்கு தெரியாது என்றும் பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும் இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில் சொல்லி ஆண்களை குழப்பும் போது. 13.தனக்காக கண்ணீர் சிந்தும் ஆண் கிடைத்தால் அவனை எப்போதும் அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது. மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக , செயலால் நேர்மையாக இருக்கும் எல்லா பெண்களுமே அழகு தான்.

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??
பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
கை பிடித்து நடக்கையில் அழகு...
தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.