கடவுள் என்று அறியப்பட்ட சிவனை சக மனிதன் என்று அமிஷ் அறிமுகம் செய்யும் போது சிவனின் பால் ஒரு தோழமை மேலிடுகிறது. பெருமைக்குரிய நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள ஊரில் வசித்தாலும் சிவன் வீதி உலா வரும்போது நான் வந்து வணங்கியது இல்லை. இனி சிவனை பார்க்க வெளியில் வருவேன், ஒருபடி மேலே சென்று கோயிலுக்கு சென்றேனும் சிவனை பார்க்க எண்ணம். "மெலூஹாவின் அமரர்கள்" வாங்கின ஜோரில் 100 பக்கம் படித்தாகிவிட்டது. நல்ல விருவிருப்பு. அறிமுகம் செய்த தோழமைக்கு நன்றிகள் பல.